இந்தியா
இந்தியா (India), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India) தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாகிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.
இந்தியக் குடியரசு
கொடி - மூவர்ணக்கொடி
Emblem -அசோகச்சக்கரம்
குறிக்கோள்:
"சத்யமேவ ஜெயதே" (சமசுகிருதம்)
"வாய்மையே வெல்லும்"
நாட்டுப்பண்:
ஜன கண மனநாட்டுப் பாடல்: வந்தே மாதரம்
வந்தே மாதரம்
தலைநகரம் - புது தில்லி
28°36.8′N 77°12.5′E
பெரிய நகர் - மும்பை
ஆட்சி மொழி(கள்)
இந்தி, ஆங்கிலம்
மக்கள் - இந்தியர்
அரசாங்கம் -நாடாளுமன்ற குடியரசு
குடியரசுத் தலைவர்- ராம் நாத் கோவிந்த்
குடியரசுத் துணைத் தலைவர்- வெங்கையாநாயுடு
பிரதமர் - நரேந்திர மோதி (பா.ஜ.க)
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நூற்று இருபத்தியொரு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.
பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலகின் பண்டைய நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா-மொகஞ்சதாரோ என்று அழைக்கப்படும் நாகரிகம் இங்கு தோன்றியது ஆகும்.
இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு தலைமை மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.
31 அக்டோபர் 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணையின் பேரில் இந்தியாவின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டது.
ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி (மூன்றாம் பதிப்பு 2009) படி, "இந்தியா" என்ற பெயர் பாரம்பரிய லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது, இது தெற்காசியாவைக் குறிக்கும் மற்றும் அதன் கிழக்கே ஒரு நிச்சயமற்ற பகுதியாகும்; இதிலிருந்து அடுத்தடுத்து பெறப்பட்டது: ஹெலனிஸ்டிக் கிரேக்க மொழியில் இந்தியா (α); பண்டைய கிரேக்க மொழியில் இந்தோஸ் (Ἰνδός); பழைய பாரசீக மொழியில் இந்துஷ், அகாமனிசியப் பேரரசின் கிழக்கு மாகாணம்; இறுதியில் இதன் அறிவாற்றல், சமஸ்கிருத மொழியில் சிந்து, அல்லது "நதி", குறிப்பாக சிந்து நதி மற்றும் இதன் மூலம், நன்கு குடியேறிய தெற்குப் படுகையை குறிப்பதாகும். பண்டைய கிரேக்கர்கள் இந்தியர்களை இந்தோய் (Ἰνδοί) என்று குறிப்பிட்டனர், இது "சிந்து மக்கள்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா நோக்கி படையெடுத்த வந்த மன்னர்கள், வர்த்தகர்கள் பலரும் வழியில் சிந்து நதியை கடந்து வரவேண்டியிருந்தது. சிந்து நதியை கடந்தால்தான் இந்திய நிலப்பரப்பில் கால்பதிக்க முடியும். அதனால், சிந்து நதியை அடுத்ததாக, சிந்து நதிக்கு மறுகரையில் உள்ள நாடு என, மேற்கத்திய நாடுகள் வர்ணிக்க தொடங்க, அது படிப்படியாக, சிந்து என்பது இந்து, இந்துஸ்தான், இந்தியா என உருமாற்றம் பெற்றது.
இந்துஸ்தான் என்பது இந்தியாவிற்கான ஒரு மத்திய பாரசீக பெயர், இது முகலாயப் பேரரசின் போது அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் பின்னர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment