சர்வதேச செவிலியர் தினம் 2021
உலகம் பூட்டப்பட்ட நிலைக்குச் சென்றுவிட்டது, நகரங்கள் அமைதியாகிவிட்டன, எதிர்காலத்திற்கான பொது நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் மருத்துவமனைகளுக்குள், முன்னெப்போதையும் விட அதிகமான மக்கள் உள்ளனர். கோவிட் -19 (கொரோனா வைரஸ்) பரவுவதை எதிர்த்து உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான செவிலியர்கள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர்.
செவிலியர்... இன்னொரு தாய்!
பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் "செவிலியர்கள்" என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். 1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses )இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.
இன்று (மே 12) உலகம் முழுவதும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நவீன நர்சிங்கின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச செவிலியர் தினம் ஏற்பாடு செய்யப்படுகிறது.
சர்வதேச செவிலியர் தினமான 2020 இன் தீம் "நர்சிங் தி வேர்ல்ட் டு ஹெல்த்".
செவிலியர்களின் தினமான இன்று அவர்களின் நிகரில்லாத சேவையைப் போற்றுவோம்.
No comments:
Post a Comment