Tuesday, June 1, 2021

DAY -2 பனை மரம் - சிறப்புகள்

பனை (PalmyraPalm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர்.

★ பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.
★ இளம் பனைகள் -வடலி  என்று அழைக்கப்படுகின்றன.
◆ பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள்  வட்டமாக அமைந்திருக்கும்.

★ பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்.
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும்  கற்பகதருவுக்கு  ஒப்பிடுவர்.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு தான்

★ ஆண், பெண் மரங்களை அடையாளம் காண முடியும்.
ஆண் பனையை ‘அழகுப்பனை’ என்றும், பெண் பனையை ‘பருவப்பனை’ என்றும் குறிப்பிடுவர்

◆ பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.
அவை
1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை
★ இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் எங்கெங்கு இடம்பெயர்ந்ததோ அவ்விடங்களில் எல்லாம் ஆதி மனிதர்கள் பனை விதைகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர் எனச் சொல்லப்படுகிறது.
◆ கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன.
★தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன.[2] இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம்,நாமக்கல்,சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன.
◆ உலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை தாளிப்பனை. வளர்ந்த ஒரு மரம் 25 மீ உயரமும் 1.3 மீ அகலமும் கொண்டது. இதன் இலைகள் 5 மீ விட்டமும் கிட்டத்தட்ட 130 சிறிய இலைகளையும் கொண்டிருக்கும்.

திருக்குறளில் பனை

★ திருக்குறளில் மொத்தமே இரண்டு மரங்கள் தான் இடம்பெற்றுள்ளன. ஒன்று மூங்கில் மற்றது பனை. அறத்துப்பாலில் செய் நன்றி அறிதல் அதிகாரத்தில் 104 வது குறளில், ‘தினைத் துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்” ஒருவன் தினை அளவு நன்றி செய்தாலும் அதைச் சிறியது என்று எண்ணாமல் உதவியின் பயனை அறிந்தவர்கள், பனை அளவு பெரிதாகவே கருதுவர்.


No comments:

Post a Comment

Sci quiz

Science Lesson - 1 ...