Thursday, June 3, 2021

DAY - 4 அதிசயங்கள் அடங்கிய அமேசான்

 

அமேசான் ஆறு


தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்.
அமேசான் ஆற்று டால்பின்  அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும்.

இங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரான்கா மனிதரை தாக்கும் வகையாகும்.

அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும்.

அமேசான்மழைக்காடு


         அமேசான்மழைக்காடு என்பது  தென்அமெரிக்காவின் அமேசான்  ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.
உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது. 

உலகின் பாதியளவு மழைக்காடுகள் கொண்ட அமேசான் மழைக்காடுகளின் பரப்பளவு 1.4 பில்லியன் ஏக்கர்கள் ஆகும்.

அமேசான் மழைக்காட்டில் 4,100 மைல் நீளம் கொண்ட அமேசான் ஆறு பாய்கிறது.
இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக்கும்    10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டி இனங்களுக்குத் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது.

No comments:

Post a Comment

Sci quiz

Science Lesson - 1 ...